Next (my first Tamil poem in blog)

அடுத்து ....

பேர் வாங்கிய கல்லூரியில்
பெரும்படிப்பு படிச்சாச்சு
வேற்று நாட்டு பட்டப்படிப்பில்
விற்பன்னன் ஆயாச்சு

வெயிலுக்கு பயமில்லை
குளிர்பெட்டி எனக்கிருக்கு
ஒயிலான காருண்டு
உடம்புக்கும் பாரமில்லை

ஓரளவு பணமிருக்கு
தருத்தனமும் எனக்கில்லை
ஊரெல்லாம் குறைசொல்லா
குடும்பமும் எனக்குண்டு

எதிர்கால வாழ்க்கையிலும்
சந்தேகம் வந்ததில்லை
புதிர்போடும் வாழ்க்கை தான்
புண்ணாக்கும் சிந்தனையை
 
வேகமெடுத்த வாழ்வெல்லாம்
வேங்கை போல இருந்தாலும்
நிக்கதான தெரியல
வெக்கம் விட்டு சொல்லுறேன் 

ஓட்டை பானை மனசிலே
ஒழுகறது நிக்கலை
எத்தணை தான் போட்டாலும் 
நிறைஞ்சது போல தெரியலை

நிழலை பிடிக்கும் விளையாட்டை
நிப்பாட்ட தெரியலை
நிறைய பேரு ஓடும்போது
நிற்பதற்கும் அஞ்சுறேன் 

ஓட்டபந்தய வாழ்க்கையாம்
ஒழுங்கை ஓட வேனுன்னான்
ஓடி நானும் பார்த்துட்டன்
முடிவு கண்ணுக்கு தெரியலை

வந்ததுமே தேவை இல்லை 
விட்டு விட துடிக்கிறேன்
துப்பு கெட்ட மனசு என்று 
திருந்துமென்று தவிக்கிறேன்   



11 comments:

Balu said...
August 20, 2010 8:58 PM

very nice..the real situation of ours in this world

Bharathi said...
August 21, 2010 9:14 AM

@ Balu: thanks Balu.

Sat_hi_sh said...
August 25, 2010 2:44 AM

After a loooooooooooooong time u r in blogging...

poem was good ,liked it very much :)
hope to see in blogging regularly :)

Bharathi said...
August 25, 2010 9:03 AM

@ Sathish: thanks buddy. yeah it is very busy now a days and I hardly in proper mindset to write any. hope I will write often in coming days.

Kamal said...
August 28, 2010 5:20 AM

Its really nice. But when I feel it, the one comes in mind is the situation all around you. And I'm really really sensing that it is important for a poet to describe his own surroundings first and then to enter into the imaginary world. You done it very well and expressed it clearly. Good job.

Bharathi said...
August 30, 2010 8:50 AM

@ Kamal: I am no poet. so n imagination here :).

Lakshmi Rajan said...
August 30, 2010 10:53 PM

Nice to read Tamil poem after longtime :)

The thoughts are nice. And liked especially the lines:

ஓட்டை பாத்திர மனசிலே
ஒழுகறது நிக்கலை
எத்தணை தான் போட்டாலும்
நிறைஞ்சது போல தெரியலை

Few lines could have been framed better:

1. ஓரளவு பணமிருக்கு
தருத்தனமும் எனக்கில்லை
ஊரெல்லாம் குறைசொல்லா
குடும்பமுமே எனக்குண்டு

I felt எனக்குண்டு could have been substituted by some other word here.

2.நிழலை பிடிக்கும் விளையாட்டை
நிப்பாட்ட தெரியலை
நிறைய பேரு ஓடும்போது
நிற்பதற்கும் பயக்கிறேன்

I feel பயக்கிறேன் again could have been substituted by another word like mudiyala or virumbala.

Just en siru thuli ennangal.

looking forward to see more poems now.

Bharathi said...
August 31, 2010 9:52 AM

@ LR: thanks for your comments buddy. I agree with your suggestions. thanks.

பரிசல்காரன் said...
October 27, 2010 4:57 PM

சில வரிகள் சொல்லும் நிதர்சனம் முகத்தில் அறைகிறது!

உங்க மெய்ல் ஐடியை ட்விட்டர்-DMல அனுப்புங்க. முடிஞ்சா ஃபோன் நம்பரும்.

பேசுவோம்...

அன்புடன் அருணா said...
November 1, 2010 5:35 PM

நிறைய பேரின் மன ஓட்டமும் இதுதான்....ஓட்டத்தை நிறுத்தினால் தோற்று விடுவோமோன்னு பயம்...மெள்ள ஓடினால் அடுத்தவன் முந்திருவான்னு பயம்!

Bharathi said...
November 1, 2010 8:50 PM

@ Parisal: it was a nice meeting :-).

@ Aruna: exactly. fear occupies major part of our lives. tks for commenting.

Blog Widget by LinkWithin