Twitter issues

தற்போதைய சின்மயி மற்றும் சக கீச்சர்கின் பிரச்சினையை பார்க்கும் போது, நாம் சில அடிப்படை விசயங்களை மறந்து விட்டோம் என்றே தோன்றுகிறது. இது அனைவருக்கும் சாதாரணமாக புரிந்திருக்கும் என நான் நினைத்திருந்தது தவறு என கருதுகிறேன்.

சுதந்திரத்திற்கு சற்று பிந்தைய காலத்தில் இருந்து கூட, சாதி ஆதிக்கத்தினால் அடிப்படை கல்வி மற்றும் வசதிகள் மறுக்கப்பட்டதினால், அவர்கள் தங்கள் சிந்திக்கும திறனையே இழந்து இருந்தனர்.

அப்படிப்பட்டவர்களுக்கு, சக மனிதனாக சமூகத்தில் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் பின் இருக்கும் காரணம் என நினைக்கிறேன். கல்வி மற்றும் வசதிகள் பரம்பரையாக மறுக்கப்பட்டு பிந்தி இருக்கும் அவர்களை, மற்றவர்களுடன் ஒரே தட்டில் வைத்து மதிப்பீடு செய்வது சரியான் முடிவாக இருக்க முடியாது. ரிலே ரேசில் ஓடும் போது, ஓடுபவர்களை வளைவின் தூரதிர்க்கேற்ப ஒருவர் பின் ஒருவராக சற்று இடைவெளி விட்டு நிறுத்துவார்கள். அவர்களை ஒரே கோட்டில் நிற்க்கசொல்வது சரியான முடிவாக இருக்க முடியாது. இது தான் இட ஒதுக்கீட்டிற்கு பின் இருக்கும் காரணம் எனநினைக்கிறேன்.

இப்போது இட ஒதுக்கீடு தேவை இல்லை என சிலர் நினைப்பதை பார்த்தோம். ஆனால் இன்றும், பல இடங்களில் சாத்திய அடக்குமுறை இருப்பதை பல பத்திரிக்கைகளில் படிக்கிறோம். அது போக, இன்னும் பலரது மனதளவில் தன் சாதி பற்றிய பெருமை இருப்பதை இளையவர்களிடத்தில் கூட காண்கிறோம். படித்த இளைய சின்மயி கூட, தன் சாதியில் இருந்து விலக முடியாது என கூறியிருப்பதாக படித்தேன். பல சாதி கட்சிகளின் வெற்றியும், இன்னும் நம்மில் சாதிய வெறி மற்றும் பெருமை விலகவில்லை என்பதையே பறை சாற்றுகின்றன. இந்நிலையில், இட ஒதுக்கீடை முற்றிலும் அகற்ற வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது.

இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் போது, அங்கொன்றும் இங்கொன்றும் ஆக சில பிரச்சினைகளை தவிர்க்க முடியாது என நினைக்கிறேன். அதை சில சமூக ஆர்வலர்களின் உதவி கொண்டு தான் தீர்க்க முயல வேண்டும் என நம்புகிறேன்.

இந்த விஷயத்தில், இட ஒதுக்கீடு தோன்றிய காரணங்கள், அதன் தற்போதய நிலை போன்ற எதையும் ஆராயாமல், ஒரு சம்பவத்தை மட்டுமே காரணமாக வைத்து உணர்சிகரமாக கருத்து சொன்ன சின்மயியின் வார்த்தைகளில் முதிர்ச்சி இல்லை என்றே நம்ப வேண்டியுள்ளது.

அதே சமயம், இதற்கான எதிர் கருத்துக்களை ஆதாரபூர்வமாக அமைதியாக வைத்திருந்தால் இனிமையாக இருந்திருக்கும் எனநினைக்கிறேன்.

முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை, அதுவும் பெண்களை கிண்டல் செய்வதை அனைவரும் ஏற்றுக்கொள்வர் என நான் நினைக்கவில்லை. அதை எதிர்க்கிற முழு உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

படித்த, சாதாரண மக்களை விடவும் நன்றாக சிந்திக்கவல்ல எழுத்தாளர்கள் நிறைந்த த்விட்டேரில் ஒரு பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படாமல் போலீஸ் வரை செல்வது வருத்தமாக உள்ளது.

நான் மதிக்கும் ஜூனியர் விகடனும் இரு புறமும் விசாரிக்காமல் கட்டுரை எழுதியது வருத்தமளிக்கிறது.

@Thoatta போன்றோரின் முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது.

0 comments:

Blog Widget by LinkWithin